Kebakaran di hutan Jalan Tanjung Kupang, Kampung Pekajang, Gelang Patah dekat sini pada 25 Ogos 2019. Foto BERNAMA
NATIONALRENCANA PILIHAN

வியாழக்கிழமை வரை கடுமையான புகைமூட்டம்! நாட்மா அறிவிப்பு

புத்ராஜெயா, செப்.18-

நாட்டில் சூழ்ந்துள்ள புகைமூட்டம், சில பகுதிகளில் கடுமையாகவும் மேலும் சில பகுதிகளில் மிதமாகவும் காணப்படும் என்றும் இந்நிலை செப்டம்பர் 19ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும் மலேசிய வானிலை அறிக்கை இலாகா தெரிவித்தது.

சரவாக் முழுவதும், மேற்கு கரை மாநிலங்கள் மற்றும் கிழக்கு சபாவில் உள்ள தாவாவ் மற்றும் சண்டாக்கான் ஆகிய பகுதிகளில் புகைமூட்டம் அதிகளவு மையமிட்டிருக்கும் என்று தேசிய பேரிடர் நிர்வாக அமைப்பு (நாட்மா) வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
சுற்றுச் சூழல் இலாகா புதன்கிழ்மை காலை வெளியிட்ட அறிக்கையில் 34 பகுதிகளில் ஆரோக்கியமற்ற சூழல் நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

நாடு முழுவதும் பரவியுள்ள புகைமூட்ட நிலவரம் குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்படும் என்று நாட்மா கூறியது.


Pengarang :