NATIONAL

விவேக நகரமாக கோலாலம்பூர் உயர செயல்திட்டங்கள்

கோலாலம்பூர், செப்.11-

வசிப்பதற்கு, வேலை செய்வதற்கு மற்றும் நிலையான சூழலைக் கொண்ட நகரங்களை உருவாக்கும் திட்டம் குறித்து மாநில முதல்வர்கள் மற்றும் மந்திரி பெசார்களுக்கு பரிந்துறைகளை வழங்கப்படவுள்ளன. இந்த நோக்கத்திற்காக 2018-2025 மலேசிய விவேக நகர மேம்பாட்டு செயல் திட்டத்தின் கீழ் விவேக நகர் மன்றம் ஒன்றை அரசாங்கம் தொடங்கவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்த செயல்திட்டத்தின் கீழ் பரிந்துறை செய்யப்பட்டுள்ள 78 வழிக்காட்டுதல்களை அமல்படுத்துவதோடு அனைத்துலக விவேக நகரங்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் மலேசியாவின் நிலையை உயர்த்துவதும் இந்த மன்றத்தின் இலக்காக இருக்கும் என்று ந்கர மற்றும் புறநகர் மேம்பாட்டு இலாகாவின் தலைமை இயக்குநர் டத்தோ முகமது அனுவார் மைடின் கூறினார்.

இஎஸ்இ சிட்டிஸ் மோஷன் குறியீட்டு பட்டியலில் உலகின் மிகச் சிறந்த விவேக ந்கரமாக லண்டன் 100 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் வேளையில், 52,83 புள்ளிகளுடன் கோலாலம்பூர் 100ஆவது இடத்தில் இரு[[அதாக அவர் சொன்னார்.

“ஒவ்வொரு மாநிலமும் இந்த செயல்திட்டத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றுவதன் வழி குறைந்தபட்சம் 60 முதல் 70 விழுக்காட்டு புள்ளிகளை பெற நம்பிக்கை கொண்டுள்ளோம். ஆயினும், இது நாட்டின் நிதி வளத்தை பொறுத்தது” என்று பெர்னாமாவிடம் முகமது அனுவார் கூறினார்.


Pengarang :