SELANGOR

ஹாங்காங் துறைமுகத்தின் பங்கேற்பை சிலாங்கூர் உறுதி செய்யும்!

ஷா ஆலம், செப்.11-

ஹாங்காங் சீன ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்கள் சங்கத்துடனான சந்திப்பு சிலாங்கூரில் ஹாங்காங் நிறவனங்கள் மீண்டும் முதலீடு செய்வதற்கான வாய்ப்பை ஏறுபடுத்தும் என்று மாநில அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது.

தளவாடம் மற்றும் கப்பல் துறைகளில் இவ்விரு துறைமுகங்களிலும் சிறந்த துறைமுக சேவை முறை இருப்பதால், இத்துறைகள் விரிவாக்கம் காண்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் காணப்படுவதாக துறைமுகம், தொழில்துறை , சிறு மற்றும் நடுத்தர வர்த்தகத் துறை ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் தெரிவித்தார்.

“மலேசியாவுக்கும் ஹாங்காங்கிற்கும் இடையிலான வர்த்தக உறவு சிரப்பாக இருந்த போதிலும், சிலாங்கூர் மாநிலம் இதில் விடுபட்டிருந்தது. ஹாங்காங் துறைமுகத்தின் செயல்பாடு சற்று மெதுவாக இருப்பது காணப்பட்டாலும். சிறந்த பத்தில் அதுவும் ஒன்ராக இருப்பதை நாம் புறம் தள்ளக்கூடாது” என்றார் அவர்.

“கடந்த 2 ஆண்டுகளில் சிலாங்கூர் மாநிலத்தில் ஹாங்காங் துறைமுகத்தை ஈடுபாட்டை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் துரிதப்பட்டிருந்தன. இவ்வாண்டு மட்டும் நான் இதுவரை ஹாங்காங்கிற்கு 4 முறை பயணித்து அங்குள்ள வர்த்தக மன்றங்களுடன் பேச்சு நடத்தியுள்ளதோடு அங்கு நடைபெற்ற கண்காட்சிகளிலும் பங்கேற்றுள்ளேன்” என்றும் அவர் சொன்னார்.


Pengarang :