Mesyuarat Penuh MPK di Bilik Mesyuarat Raja Mahadi pada 31 Oktober 2019. Foto FIKRI YUSOF/SELANGORKINI
PBTSELANGOR

அக்டோபர் 24 வரை வெ.181.1 மில்லியன் மதிப்பீடு வரி வசூலிப்பு! எம்பிகே பெருமிதம்

கிள்ளான், அக்டோபர் 31:

இவ்வாண்டு அக்டோபர் 24ஆம் தேதி வரையில் மதிப்பீட்டு வரியாக மொத்தம் 181.1 மில்லியன் வெள்ளியை கிள்ளான் நகராண்மைக் கழகம் (எம்பிகே) வசூலித்துள்ளது. கடந்தாண்டு இதே கால கட்டத்தில் 171.1 மில்லியன் வெள்ளி மட்டுமே வசூலிக்கப்பட்டது.

கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு வசூலிக்கப்பட்ட தொகை 6 விழுக்காடு அல்லது 10 மில்லியன் வெள்ளி அதிகரித்துள்ளது என்று எம்பிகே தலைவர் டத்தோ முகமது யாசிட் பிடின் தெரிவித்தார்.
2018 முதலாம் காலாண்டில் 77.7 மில்லியன் வெள்ளி மதிப்பீட்டு வரியாக வசூலிக்கப்பட்ட வேளையில் இவ்வாண்டு 3 விழுக்காடு அதிகரித்து 79.9 மில்லியன் வெள்ளி வசூலிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

அதேவேளையில் 2018 இரண்டாம் காலாண்டில் 70.9 மில்லியன் வெள்ளி மட்டுமே வசூலிக்கப்பட்டது என்றும் இவ்வாண்டு அதே கால கட்டத்தில் 77.6 மில்லியன் வெள்ளி வசூலிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :