Amirudin Shari. Foto
SELANGOR

அந்நிய நாட்டவர்களுக்கு விற்கப்படும் வீடுகளின் விலை: எல்பிஎச்எஸ் அறிக்கைக்கு பின்னர் முடிவு செய்யப்படும்

ஷா ஆலம், அக்.14-

அந்நிய நாட்டவர்களிடம் விற்கப்படவிருக்கும் சொகுசு வீடுகளின் விலையை நிர்ணயிப்பதற்கு முன்னர் சிலான்கூர் வீடமைப்பு மற்றும் சொத்துடைமை வாரியத்தின் (எல்பிஎச்எஸ்) அறிக்கைக்காக மாநில அரசு காத்திருக்கிறது.
மக்களுக்கு ஏற்படக் கூடிய சமூக தாக்கம் உட்பட பலவற்றை கருத்தில் கொண்டு அந்நியர்களுக்கான வீடுகளின் உச்சகட்ட விலையாக தற்போது 2 மில்லியன் வெள்ளியை மாநில அரசு நிர்ணயித்துள்ளது என்றார் அவர்.

“அந்நிய நாட்டவர்களுக்கான வீடுகளுக்கு அதிகபட்ச வெ.2 மில்லியனை நிர்ணயம் செய்துள்ள மாநிலம் என்ற அடிப்படையில், இந்த விலை குறைக்கப்படும் நடவடிக்கையால் ஏற்படக்கூடிய விளைவுகளை ஆராயந்து வருகிறோம்” என்றும் அவர் சொன்னார்.

“சம்பந்தப்பட்ட வீடுகளின் விலையை நிலைநிறுத்துவது அல்லது குறைப்பது குறித்து ஆய்வுகளை மேற்கொள்லும்படி மாநில வீடமைப்பு வாரியத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்னரே உத்தரவு பிறப்பத்துள்ளேன்” என்றார் அவர்.


Pengarang :