NATIONALRENCANA PILIHAN

அனைத்து தரப்பினரையும் கவர்ந்த இடைவெளி குறைக்கும் பட்ஜெட்

கோலாலம்பூர், அக்.15-

நிலைத்தன்மையற்ற உலக பொருKளாதார சூழ்நிலையில் நாட்டின் பொருளாதார மேம்பாட்டை மேற்கொள்வதற்கான வழி வகைகளை ஆராயும் கொள்கை அடிப்படையில் கடந்த அக்டோபர் 11ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட 2020 வரவு செலவு திட்டம் அமைந்திருந்தது.

நாட்டின் வளர்ச்சி சீராக இருப்பதை உறுதி செய்யக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளது என்று நிதியமைச்சின் தேசிய வரவு செலவு திட்டப் பிரிவு இயக்குநர் ஜோஹான் மஹ்முடி மெரிக்கான் கூறினார்.

இளைஞர்கள் மத்தியில் உள்ள வேலையில்லாதோர் விகிதாச்சாரம், சபா மற்றும் சரவாக் ஆகியவற்றின் மேம்பாடு, புறநகர் மேம்பாடு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினரின் தேவை, மகளிர் மற்றும் உடல்பேறு குறைந்தோர் ஆகியவை உட்பட அனைத்து அம்சங்களின் இடைவெளியை குறைப்பதற்கு இந்தத் திட்டம் முக்கியத்துவம் வழங்கியது என்றார் அவர்.

இந்த வரவு செலவு திட்டமானது அனைத்து தரப்பினரையும் உட்படுத்தியுள்ளதால் இந்த அறிக்கை பலரையும் கவர்ந்துள்ளது எனலாம் என்று அவர் கருத்துரைத்தார்.


Pengarang :