Pelancaran Sistem Pengesahan Identiti Peniaga (SPIP) oleh Datuk Bandar Majlis Bandaraya Petaling Jaya, YBHG Dato’ Sayuthi Bakar sempena Majlis Pelancaran Kempen Jom Bayar Lesen Perniagaan Tahun 2020 di Bilik Gerakan, Ibu Pejabat MBPJ pada 30 Oktober 2019. Foto FIKRI YUSOF/SELANGORKIN
PBTSELANGOR

அமலாக்க நடவடிக்கையை எளிதாக்க எஸ்பிஐபி அறிமுகம்!

பெட்டாலிங் ஜெயா, அக்டோபர் 31:

அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வர்த்தகர்கள் மீதான கண்காணிப்பு நடவடிக்கையை மேம்படுத்தும் நோக்கத்தில் வத்தகர் அடையாளம் உறுதிசெய்யும் முறையை (எஸ்பிஐபி) பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றம் அறிமுகப்படுத்தியது.

முக்கிய பகுதிகளில் சிறு தொழில்முனைவர்கள் தங்கள் சொந்த வர்த்தகத்தை புரிகின்றரா அல்லது உரிமம் இன்று உள்ளனரா என்பதை இந்த முறையின் வாயிலாக எளிதாக அடையாளம் காண முடியும் என்று பெட்டாலிங் ஜெயா டத்தோ பண்டார் டத்தோ முகமது சாயுத்தி பாக்கார் கூறினார்.

“இந்த முறையின் கீழ் கைவிரல் ரேகையைப் பயன்படுத்தி அடையாள அட்டையை உறுதி செய்வதோடு இது இ-லைசென்ஸ் முறையோடு ஒன்றிணைக்கப்பட்டுள்ளது” என்று அவர் விளக்கினார்.
“மேலும், திறந்த வெளியில் அறிக்கையில் பெறவும் அச்சடிக்கவும் இந்த முறை வகை செய்வதால், இது அமலாக்க நடவடிக்கையை மேலும் எளிதாக்கும்” என்றார் அவர்.


Pengarang :