nggota penguat kuasa MPS merobohkan kandang kambing yang dibina secara haram tanpa kelulusan pentadbir tanah, di Mukim Rawang, di sini semalam. Foto Ihsan MPS
PBTSELANGOR

சட்டவிரோத ஆட்டுக் கொட்டகை உடைக்கப்பட்டது!

குவாங், அக்டோபர் 31:

அரசாங்க நிலத்தில் அத்துமீறி ஆக்கிரமித்து ஆட்டு கொட்டகையை கட்டிய பொறுப்பற்ற நபர், அவரது செயலுக்கான விளைவை இன்று காலை சந்தித்தார். முக்கிம் ரவாங்கில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட அக்கொட்டகையை செலாயாங் நகராண்மைக் கழக அமலாக்க அதிகாரிகள் இன்று இடித்துத் தள்ளினர்.

ஒரு கண்ணாடி தொழிற்சாலை அருகே சட்டவிரோதமான முறையில் அக்கொட்டகையை கோம்பாக் மாவட்ட மற்றும் நில அலுவலகம் மற்றும் மலேசிய காவல் துறை ஆகியவற்றின் ஒத்துழைப்போடு உடைக்கப்பட்டது என்று எம்பிஎஸ் கார்பிரெட் பிரிவு இயக்குநர் முகமது ஜின் மாசோட் கூறினார்.

நில நிர்வாகத்தின் அனுமதியின்றி கட்டப்பட்ட அக்கொட்டகை 1965 தேசிய நிலச் சட்டத்தின் 425ஆவது பிரிவின் கீழ் உடைக்கப்பட்டது என்றார் அவர்.
சம்பந்தப்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் இக்கொட்டகை கட்டப்பட்டது குறித்து பொது மக்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.


Pengarang :