Sebuah daripada tiga pusat cuci kereta haram dirobohkan MPS. Foto Ihsan MPS
PBTSELANGOR

சட்டவிரோத 3 கார் கழுவும் கடைகளை எம்பிஎஸ் இடித்து தள்ளியது

பத்து கேவ்ஸ், அக்.25-

முறையான உரிமத்தை பெற மறுத்த காரணத்தால், செலாயாங் நகராண்மைக் கழகம் மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கையின் மூன்று கார் கழுவும் கடைகள் இடித் தள்ளப்பட்டன. இச்சம்பவம் இங்குள்ள கம்போங் மிலாயுவில் நேற்றிரவு நடந்தது.

ஊராட்சி மன்றத்திடம் இருந்து முறையாக உரிமம் பெற்றிராத மூன்று கடைகளை அமலாக்க அதிகாரிகள் அடையாளம் கண்டதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட கடைகளை இடித்தள்ளும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக எம்பிஎஸ் ப்ருநிறுவன பிரிவு இயக்குநர் முகமது ஜின் மாசோட் கூறினார்.

நகராண்மைக் கழகத்தின் 46ஆவது இணை சட்டத்தின் பிரிவு1(எ)இன் கீழ் சம்பந்தப்பட்ட கடைகளை உடைக்கவும் அவற்றின் பொருட்களை பறிமுதல் செய்ய வகை செய்யும் ஆறு அறிக்கைகள் வெளியிட்டப்பட்டன என்றும் அவர் சொன்னார்.

“சம்பந்தப்பட்ட கடைகள் கெமாஸ் சிறார் பராமரிப்பு மையத்திற்கு எதிரே அமைந்துள்ள பொது சாலையில் நிர்மாணிக்கப்பட்டிருந்தன” என்றார் அவர்.


Pengarang :