SELANGOR

ஜாலான் எஃப்டி 180 சீரமைப்பு பணி விறுவிறுப்பாக நடைபெறுகிறது!

கிள்ளான், அக்டோபர் 31:

அடிக்கடி பழுதடையும் செக்ஸன் 3.00-5.20 எஃப்டி 180 சாலை, ஜாலான் பெலாபுஹான் உத்தார், பெலாபுஹான் கிள்ளான் சாலைகள் ‘சிஐபிஆர்’ எனும் முறையைப் பயன்படுத்தி செப்பணிடும் பணி நேற்றிரவு தொடங்கியது.
இந்த சாலை சீரமைப்பு பணி கோத்தா பண்டமாரான் ஷெல் எண்ணெய் நிலையம் தொடங்கி பெலாபுஹான் உத்தாரா நோக்கிச் செல்லும் வழியில் கோத்தா பண்டமாரான் பெட் ரோனாஸ் நிலையம் வரை நடைபெறும் என்று கிள்ளான் துறைமுக சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிஸாம் ஸாமான் ஹுரி தெரிவித்தார்.

ரோட்கேர் சென் பெர்ஹாட் நிருவனத்தின் மூல பொதுப்பணி இலாகா (ஜேகே ஆர்) மேற்கொள்ளும் இந்த சீரமைப்பு நடவடிக்கை நவம்பர் 30ஆம் தேதி நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் சொன்னார்.
இச்சாலையை அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் குறிப்பாக கொண்டேனா லாரி போன்ற கன ரக வாகனங்கள் பயன்படுத்துவதால் இப்பகுதியில் உள்ள நெடுஞ்சாலை அடிக்கடி பழுதடைவதாக அஸ்மிஸாம் குறிப்பிட்டார்.


Pengarang :