Indonesian President Joko Widodo (R) shakes hands with Chairman of Gerindra Party Prabowo Subianto after Jokowi was sworn in for a second term as president at the parliament building in Jakarta on October 20, 2019. – Indonesia’s President Joko Widodo was sworn in for a second term on October 20, as helicopters flew overhead and troops kept watch in the capital Jakarta — days after Islamist militants tried to assassinate his top security minister. (Photo by Achmad Ibrahim / POOL / AFP)
ANTARABANGSARENCANA PILIHAN

ஜோகோவியின் அமைச்சரவையில் அவரது அரசியல் எதிரி!

ஜாக்கர்த்தா, அக்.23-

இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோவின் (ஜோகோவி) அரசியல் எதிரியான பிராபோவோ சுபியாண்டோ 2019-2024 ஜோகோவி அமைச்சரவையில் தற்காப்பு அமைச்சராக இன்று பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
கெரிண்டா கட்சியின் தலைவரான பிராபோவோ (வயது 68) 2014 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இரண்டு அதிபர் தேர்தல்களிலும்ஜோகோவியிடம் தோல்வியுற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விருவரிடையிலான அரசியல் பகை கடுமையானதல்ல என்பதால் இருவரும் தங்கள் தனிப்பட்ட விவகாரங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு தேசிய நலனுக்கு முன்னிரிமை வழங்கியுள்ளனர் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இவர்களது அரசியலானது மாநில அளவிலான காற்பந்தாட்ட போட்டிகளில் கடும் போட்டியோடு விளையாடி விட்டு, தேசிய நிலையிலான போட்டியில் ஒன்று சேர்ந்து ஆடும் விளையாட்டாளர்களுக்கு ஒப்பானது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


Pengarang :