Seorang wanita 65 tahun meninggal dunia akibat serangan jantung selepas dikejar anjing liar di simpang empat jalan masuk Kampung Baru Dengkil pada 29 Sept 2020.
SELANGOR

தெரு விலங்குகளை பிடிப்பதற்கு சிறப்பு பயிற்சி, புதிய ஆயுதம்!

ஷா ஆலம், அக்.8-

தெரு நாய்களை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் ஊராட்சி மன்ற அமலாக்க அதிகாரிகளின் பாதுகாப்பு மற்றும் சம்பந்தப்பட்ட நாய்கள் காயமடைவதைத் தவிர்க்கவும் புதிய நடைமுறை ஒன்றை மாநில அரசு வடிவமைத்து வருகிறது.

இந்த நடைமுறையில் விலங்குகளை பிடிக்கும் ஆயுதத்தை மாற்றுவதும் அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிப்பதும் அடங்கும் என்று ஊராட்சி மன்றம், பொது போக்குவரத்து மற்றும் புதுக் கிராம மேம்பாட்டு துறை ஆட்சிக் குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் விலங்குகளுக்கு ஏற்படும் காயங்களை குறைக்கும் வகையிலான நடைமுறை குறித்து அரசு சாரா இயக்கங்கள் சிலவற்றுடன் மாநில அரசு விவாதித்துள்ளதாக அவர் சொன்னார்.

இவ்விவாதத்தின்போது தெருக்களில் காணப்படும் நாய் மற்றும் பூனைகளைப் பிடிக்கும் நடவடிக்கை குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. என்றும் புதிய நடைமுறை குறித்தும் விரைவில் அறிவிக்கப்படும் என்றார் அவர்.


Pengarang :