Lim Guan Eng ketika pembentangan Belanjawan 2020 di Parlimen pada 11 Oktober 2019. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI
NATIONALRENCANA PILIHAN

நாட்டின் பொருளாதாரம் சரியான தடத்தில் உள்ளது!

கோலாலம்பூர், அக்.14-

அமெரிக்கா – சீனா வர்த்தக போரினால் பொருளாதார நீடித்த நிலைத்தன்மைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள போதிலும் நாட்டின் பொருளாதாரம் சரியான தடத்தில் இருக்கிறது என்றும் மூன்றாண்டு பொருளாதார திட்டத்தில் குறிப்பிட்டிருப்பது போல் பொருளாதாரம் சீரடையும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

2019ஆம் ஆண்டில் உள்நாட்டு மொத்த உற்பத்தி பற்றாக்குறை விகிதம் 3.4 விழுக்காட்டிற்கு குறைக்கும் இலக்கு நிறைவேறும் என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் நம்பிக்கை தெரிவித்தார்.
இதனிடையே 2020ஆம் ஆண்டிற்கு நிர்ணயிக்கப்பட்ட 3.0 விழுக்காடு 3.2 விழுக்காடாக மறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆயினும், இது 28 விழுக்காடாக குறுகிய காலத்தில் அடையக்கூடிய தடத்தில் உள்ளது என்றும் அவர் சொன்னார்.

3.0 விழுக்காடு 3.2 விழுக்காடாக உயர்வது அதிகமாக இல்லை என்ற போதிலும், நிதியானது எதற்காக எவ்வளவு செலவு செய்யப்படுகிறது என்பது முக்கியமானதாகும் என்று அவர் விளக்கமளித்தார்.


Pengarang :