KUALA LUMPUR, 7 Okt — Perdana Menteri Tun Dr Mahathir Mohamad menjawab soalan pada Mesyuarat Ketiga Penggal Kedua Parlimen ke-14 di Bangunan Parlimen hari ini. Turut kelihatan Timbalan Perdana Menteri Datuk Seri Dr Wan Azizah Wan Ismail. –fotoBERNAMA (2019) HAK CIPTA TERPELIHARA ?
NATIONAL

நாட்டின் வறுமை குறியீடு குறித்த மறுஆய்வு மார்ச் மாதம் தொடங்கிவிட்டது! – பிரதமர்

கோலாலம்பூர், அக்.7-

நாட்டின் வறுமை குறித்த உண்மையான நிலையை அறிய வறுமை கோட்டை அளவிடும் நடைமுறையை மறு ஆய்வு செய்யும் நடவடிக்கையை கடந்த மார் மாதமே அரசாங்கம் தொடங்கிவிட்டதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்தார்.

இந்த ஆய்வு நடவடிக்கை மலேசிய புள்ளி விவர இலாகா, சுகாதார அமைச்சு மற்றும் சம்பந்தப்பட்ட அமைப்புகளின் ஒத்துழைப்போடு மேற்கொள்ளப்பட்டு வருவதாக மக்களவையில் மகாதீர் கூறினார்.

ஐக்கிய நாட்டு அமைப்பின் புள்ளிவிவர பிரிவு வகுத்துள்ள அனைத்துல்க தரத்திலான நடைமுறையைப் பின்பற்றியே நாட்டின் வறுமை விகிதாச்சாரம் இதுவரை கண்க்கிடப்பட்டு வந்துள்ளதாக அவர் சொன்னார்.

அறிவிக்கப்பட்டுள்ள நாட்டின் வறுமை விகிதாச்சாரத்தை காட்டிலும் மலேசியாவில் மேலும் அதிகமானோர் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்வதாக ஐநா அறிக்கை குறிப்பிட்டிருப்பது தொடர்பில் போர்ட் டிக்சன் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தொடுத்த கேள்விக்கு பதலளிக்கையில் மேற்கண்டவாறு பிரதமர் பதலளித்தார்.


Pengarang :