NATIONALRENCANA PILIHAN

பட்ஜெட் 2020: தீயணைப்பு சேவை அம்சங்களை கருத்தில் கொள்ளும்படி கோரிக்கை

கோலாலம்பூர், அக். 7-

வரும் 11 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவிருக்கும் 2020 வரவு செலவு திட்டத்தில் தீயணைப்பு, பாதுகாப்பு மற்றும் மனிதநேய சேவை ஆகிய அம்சங்கள் மீது பரிசீலனை செய்யும்படி அரசாங்கத்தை மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்பு துறை கேட்டுக் கொண்டது.

தீயணைப்பு நிலைய கட்டுமானம், தீயணைப்பு நடவடிக்கை பிரிவு சொத்துகளை அதிகரித்தல், நீர் மற்றும் நிலத்தில் தேடும் மற்றும் மீட்பு பணி முதலியவை இந்த அம்சங்களில் அடங்கும் என்று இத்துறையின் தலைமை இய‌க்குன‌ர் டத்தோ முகமது ஹம்டான் வாஹிட் கூறினார்.

“தொழிற்துறை மற்றும் வேலையிடத்தைத் தவிர்த்து இந்த பட்ஜெட் அபாயகர சாதன பிரிவு வீரர்களின் அபாயகர பொருள் கையாளும் அம்சத்தையும் கருத்தில் கொள்ளும் என்று தீயணைப்பு மற்றும் மீட்பு துறை நம்புகிறது” என்று பெர்னாமாவிடம் அவர் விவரித்தார்.

அதிகமான தீயணைப்பு நிலையங்கள் கட்டப்படுவது நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களின் பாதுகாப்பை அதிகரிக்கும். அதே வேளையில், நடவடிக்கை பிரிவு சொத்துடமையை அதிகரிப்பது உயரமான கட்டிடம், காட்டுப் பகுதி மற்றும் பிரத்தியேக பகுதிகள் போன்றவற்றில் தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கத்திற்கானது என்று கூறப்பட்டது.


Pengarang :