NATIONAL

பேச்சுரிமைக்கும் ஓர் எல்லை உண்டு!

ஷா ஆலம், அக்.16-

பேச்சுரிமை என்பது எந்தவொரு வரையரையும் இன்றி பயன்படுத்துவதற்கல்ல, மாறாக முறையான வழிமுறையில் தெரிவிப்பதாகும் என்று மலேசிய இளையோர் மன்றத்தின் தகவல் பிரிவு தலைவர் வான் முகமது ஹுஸ்னி அப்துல்லா கூறினார்.

கடந்த அக்டோபர் 14ஆம் தேதி மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 59ஆவது பட்டமளிப்பு நிகழ்ச்சியின்போது பட்டதாரி மாணவர் ஒருவர் எதிர்ப்பு கோஷமிட்டதுடன் சுலோகப் பலகையை காட்டிய சம்பவத்தை மேற்கோள்காட்டி அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.

நாட்டின் நல்லிணக்கத்தை உறுதிசெய்ய குடிமக்கள் அனைவரும் ருக்குன் நெகாராவின் நன்னடத்தையும் ஒழுக்கத்தையும் பேணுதல் எனும் கோட்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என்றார் அவர். இது போன்ற நடவடிக்கையானது அனைத்து தரப்பினரும் மதிக்கும் சம்பிரதாயம் மற்றும் நெறிமுறையை பாழ்படுத்தும் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :