RENCANA PILIHANSELANGOR

வணிக சந்தையை விரிவாக்கம் செய்ய வணிகர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

ஷா ஆலம், அக்.2-

வியாழக்கிழமை தொடங்கவிருக்கும் சிலாங்கூர் டிஜிட்டல் பொருட்கள் மின் விநியோக சங்கிலி தொடர் (செல்டெக்) நடவடிக்கை, தங்கள் வணிக சந்தையை விரிவாக்கம் செய்ய விரும்பும் வர்த்தகளுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

மின்னியலை கொண்டு வணிகப் பொருட்களை விநியோகிக்கும் சங்கிலி தொடர் வணிக நடவடிக்கையை மந்திரி பெசார் அமிருடின் ஷாரி அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைப்பார் என்று தொழில்முனைவர் மேம்பாடு, புற நகர் மேம்பாடு மற்றும் பாரம்பரிய கிராமத் துறை ஆட்சிக் குழு உறுப்பினர் ரோட்ஸியா இஸ்மாயில் கூறினார்.

சிலாங்கூர் மேம்பாட்டு கழகம், சிலாங்கூர் விவசாய மேம்பாட்டு கழகம், சிலாங்கூர் ஸ்மார்ட் விநியோகப் பிரிவு மற்றும் எம் எம் ஏஜி ஹோல்டிங்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் மந்திரி பெசார் கழகம் இந்நடவடிக்கையை ஏற்பாடு செய்துள்ளது.

“இது ஒரு பெரிய வாய்ப்பாகும். ஏனெனில் பல பொருட்களை இந்த நடவடிக்கையின் மூலம் இங்குள்ள கிராமங்களில் இருந்து வெளியூர்களுக்கு மட்டுமல்ல வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய ஏற்பாடு செய்துள்ளோம்” என்றார் அவர்.


Pengarang :