Ir Izham (empat, kiri) ketika melawat Pusat Ternakan Ikan Empurau bersama Jabatan Perikanan Selangor di Puchong pada 14 Oktober lalu. Foto Facebook Ir Izham
RENCANA PILIHANSELANGOR

விவசாய தொழில்துறையினருக்கு ‘குரு-சிஷ்யன்’ முறையிலான பயிற்சி

ஷா ஆலம், அக்.16-

விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழில்துறையில் ஈடுபடுவோருக்கு உதவும் வகையில் சிலாங்கூர் விவசாய தொழில்துறை மேம்பாட்டு கழகம் குரு- சிஷ்யன் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்திட்டத்திற்காக சிலாங்கூர் பழத் தோட்டத் தொழில்முனைவர், சுங்கை பஞ்சாங்கின் அன்னாசி தோட்டக்காரர் மற்றும் சுங்கை ஆயர் தாவாரைச் சேர்ந்த ரோஸ் தோட்ட சொந்த்க்காரர் ஆகிய மூவர் குருவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளனர் என்று அடிப்படை வசதி மற்றும் பொது போக்குவரத்து, நவீன விவ்சாயம் மற்றும் விவசாயம் தொழில் துறையின் ஆட்சிக் குழு உறுப்பினர் இஷாம் ஹாஷிம் கூறினார்.

விவசாய தொழில்முனைவர்களை முறையாகவும் திறன்மிக்கவர்களாகவும் உருவாக்குவதற்கு இந்தத் திட்டம் வகுக்கப்பட்டது என்றார் அவர்.
“விவசாயம் தவிர்த்து, அதிக வருவாயை ஈட்டக் கூடிய மீன் வளர்ப்பு துறையைச் சேர்ந்த பயிற்சியளிக்கக் கூடிய குரு ஒருவரையும் அடையாளம் கண்டுள்ளோம்” என்றும் அவர் சொன்னார்.


Pengarang :