Amirudin Shari menyampaikan ucapan dalam Majlis Apresiasi Dato’ Menteri Besar Selangor Bersama Majlis Guru Besar Selangor di Kediaman Rasmi Dato’ Menteri Besar, Shah Alam pada 4 Oktober 2019. Foto ASRI SAPFIE/SELANGORKINI
RENCANA PILIHANSELANGOR

2020 சிலாங்கூர் வரவு செலவு திட்டத்தில் கல்வி மீது கவனம் செலுத்தப்படும்

ஷா ஆலம், அக்.4-

மாநில சட்டமன்றத்தில் வரும் நவம்பர் மாதம் தாக்கல் செய்யபடவிருக்கும் 2020 வரவு செலவு திட்டத்தில் முழுமையான கல்வி திட்டம் மீது அதிக கவனம் செலுத்தப்படும்.
செயலி பயன்பாட்டின் மூலம் 4.0 தொழில்துறை புரட்சியின் விரிவாக்கத்தில் இணையத் தொடர்பு முறையின் ஆதிக்கமானது உலக கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளது என்று மந்திரி பெசார் அமைருடின் ஷாரி கூறினார்.

2025ஆம் ஆண்டு வாக்கில் சிலாங்கூர் ஒரு விவேக மாநிலமாக உருவாகும் போது 4.0 தொழிற்துறை புரட்சியின் விரிவாக்கத்தில் ஏற்படுத்தப்படும் வேலை வாய்ப்புகள் குறித்து தலைமை ஆசிரியர்கள் அறிந்திருப்பது அவசியம் என்றார் அவர்.
எனவே அடுத்த வரவு செலவு திட்ட விவாதத்தின் போது கல்வி பாடத் திட்டம் ஒரு முக்கிய அம்சமாக வலியுறுத்தப்படும் என்றார்.

நாடு மேம்பாடு அடையும்போது அதைப் பயன்படுத்தி முன்னேறும் சூழலில் நமது மாணவர்கள் இல்லாதிருப்பதால் எந்த ஒரு பயனுமில்லை என்று அமிருடின் கூறினார்.


Pengarang :