EXCO Kerajaan Negeri Selangor, Haniza Talha melawat ruang pameran di Ekspo Hartanah dan Perumahan Malaysia (MAPEX), MAPEX Shah Alam/Klang di Central I-City, Shah Alam pada 15 November 2019. Foto FIKRI YUSOF/SELANGORKINI
RENCANA PILIHANSELANGOR

அந்நிய நாட்டவர்களுக்கான சொத்துடமை உச்சவரம்பு மதிப்பு அடுத்தாண்டு அறிவிக்கப்படும்

ஷா ஆலம், நவ. 15-

அந்நிய நாட்டவர்களுக்கான சொத்துடமைகளின் உச்சவரம்பு மதிப்பு குறித்து சொத்துடமை தொழில்துறையினருடன் மாநில அரசு விவாதம் நடத்தவிருக்கிறது.
ஆயினும், நிரணயிக்கப்படவிருக்கும் புதிய உச்சவரம்பு மதிப்பானது அண்மையில் 2020 வரவு செலவு திட்டத்தின் நிதியமைச்சு அறிவித்த விலையோடு ஒத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று வீடமைப்பு மற்றும் நகர்ப்புற வாழ்வு ஆட்சிக் குழு உறுப்பினர் ஹானிஸா முகமது தல்ஹா கூறினார்.

சிலாங்கூரில் இதுவரை கட்டி முடிக்க்கப்பட்டு எத்தனை காலம் விற்கப்படாமல் இருக்கிறது என்பது போன்ற அம்சங்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும் என்று அவர் விவரித்தார்.

எவ்வித எதிர்ப்பும் இல்லையென்றால், அந்நிய நாட்டவர்களுக்கான சொத்துடமை உச்சவரம்பு மதிப்பீடு குறித்து அடுத்தாண்டு முடிவெடுக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :