Seorang kanak-kanak tidak melepaskan peluang berswafoto bersama Amirudin Shari ketika Majlis Rumah Terbuka Deepavali DUN Sungai Tua 2019 di Dewan Seri Siantan, Batu Caves pada 24 November lalu. Foto ASRI SAPFIE/SELANGORKINI
NATIONALSELANGOR

இன அரசியலை மக்கள் புறக்கணிக்க வேண்டும்! – அமிருடின் ஷாரி

பத்து கேவ்ஸ், நவ.25-

பொறுப்பற்ற தரப்பினர் வேண்டுமென்றே மேற்கொள்ளும் குறுகிய மனப்பான்மையிலான அரசியல் சதுரங்க ஆட்டத்தை சிலாங்கூர் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்க மாநில அளவில் மட்டுமல்லாது கூட்டரசு நிலையில் எதிர்க்கட்சிகள் இது போன்ற சூழ்ச்சி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்றார் அவர்.

“சீனர்களைச் சந்திக்கும் போது, பிரதமர் மகாதீர் ஓர் இனவாதி என்றும் சீனர்களுக்கு எதிரானவர் என்று அவர்களை மிரட்டுவர்”.
“அதன் பின்னர் மலாய்க்காரர்களைச் சந்தித்து மலாய்காரர்கள் எப்போதுமே இதர இனத்தவர்களின் சவாலை எதிர்நோக்கும் கொண்டுள்ளதாக கூறுவர்” என்றார் அவர்.
இந்த எலும்பில்லாத நாக்கின் சொற்களுக்கு சிலாங்கூர் மக்கள் செவிசாய்க்கக் கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :