NATIONAL

இரு அம்னோ எம்பிக்கள் மத்தியில் தகராறு! நாடாளுமன்ற வளாகத்தில் பரப்பரப்பு

கோலாலம்பூர், நவ.20-

அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் ஒருவர் மற்றொருவரை மரியாதைக் குறைவான வார்த்தைகளால் திட்டிக் கொண்டதால் நாடாளுமன்ற வளாகம் இன்று பரப்பரப்பானது. கோல குராவ் உறுப்பினர் டத்தோஸ்ரீ இச்மாயில் முகமது சாயிட் மற்றும் பாசீர் சாலாக் உறுப்பினர் டத்தோஸ்ரீ தாஜூடின் அப்துல் ரஹ்மான் ஆகிய இருவரும் கடுமையான வார்த்தைகளை உபயோகித்து சவால் விடுத்தனர்.

தேமு பழைய எம்பி ‘போடோ’ ஸ்டூபிட் என்று இஸ்மாயில் திட்டியதால் சினமடைந்த தாஜூடின் ‘தைரியம் இருந்தா இங்கே வா என்று சவால் விட்டார்.
தாஜூடின் இஸ்மாயிலை நெருங்கிய போது நாடாளுமன்ற பாதுகாவலர் தடுத்து நிறுத்தினார். நோய்வாய்ப்பட்டுள்ள இஸ்மாயில் மகளின் புகைப்படத்தை தாஜூடின் பரப்பியதாக கூறி இருவரும் தகராறில் ஈடுபட்டனர்.


Pengarang :