Ir. Izham Hashim. Foto
SELANGOR

ஈஜோக்கில் உள்ள 30% தரிசு நிலங்களை விவசாயத்திற்கு பயன்படுத்தலாம்!

ஷா ஆலம், நவ.13-

சிலாங்கூர் நவீன விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்துறை மூலம் தனது தொகுதியில் இருக்கும் 30 விழுக்காட்டு தரிசு நிலங்கள் பயன்படுத்தப் படலாம் என்று ஈஜோக் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இட்ரிஸ் அகமது பரிந்துரை செய்தார்.
பல நிலங்களின் உரிமையாளர்கள் முதுமை காரணமாக நிலங்களில் பயிரிடுவதில்லை என்றார் அவர்.

எனவே, இந்தத் தரிசு நிலங்களைப் பயன்படுத்துவது மாநில அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நான் அறிய விரும்புகிறேன். மேலும் இவற்றை விவசாயத் தொழிற்துறைக்குப் பயன்படுத்தும் எண்ணம் ஏது அரசிடம் இருக்கிறதா என்பதையும் ஆவலாய் இருக்கிறேன் என்றார் இட்ரிஸ்.
இதற்கு பதிலளித்த அடிப்படை கட்டமைப்பு மற்றும் பொது வசதி, நவீன விவசாயம் மற்றும் விவசாயம் சாந்ர்த தொழிற்சாலை துறை ஆட்சிக் குழு உறுப்பினர் இஸாம் ஷாஷிம், தரிசு நிலங்களைப் பயன்படுத்துவதற்கு பொதுமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன என்றார்.


Pengarang :