SELANGOR

ஊராட்சி மன்ற உயர்மட்ட நிர்வாகப் பொறுப்புகளுக்கு அரசியல்வாதிகள் நியமிக்கப்படுவரா?

ஷா ஆலம், நவ.12-

அரசியல்வாதிகளை ஊராட்சி மன்றத்தின் உயர்மட்ட நிர்வாகப் பொறுப்புகளுக்கு நியமிக்க மாநில அரசு விரும்பினால் செயல்படுத்தலாம். ஆயினும், சம்பந்தப்பட்ட அரசியல்வாதி அப்பொறுப்பை சிறப்பாக நிர்வகிக்க முடியுமா என்பது பரிசீலிக்கப்படுவது அவசியமாகும் என்று ஊராட்சி மன்றம், பொது போக்குவரத்து மற்றும் புதுக் கிராம மேம்பாட்டு துறைக்கான் ஆட்சிக் குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் தெரிவித்தார்.

நிர்வாகத் திறன் மற்றும் அனுபவம் குறித்தும் அவசியம் பரிசீலிக்க வேண்டும் ஏனெனில் ஊராட்சி மன்றத்தை நிர்வகிப்பது ஒன்று எளிதான காரியம் அல்ல என்று தாமான் டெம்பளர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முகமது சானி ஹம்சான் கேட்ட துணைக் கேள்விக்குப் பதிலளிக்கை இங் கூறினார்.
முன்னதாக, ஊராட்சி மன்றங்களுக்கு இடையில் அதிகாரிகள் பரிமாற்றத்தை அமல்படுத்த மாநில அரசு எண்ணியுள்ளதா என்று பாத்தாங் காலி உறுப்பினர் ஹருமைனி ஒமார் கேட்டார்.


Pengarang :