IPOH, 23 Ogos — Pengerusi Jawatankuasa Perumahan, Kerajaan Tempatan, Pengangkutan Awam, Hal Ehwal Bukan Islam dan Kampung Baharu Perak, Paul Yong Choo Kiong keluar dari mahkamah selepas pendakwaan terhadapnya atas tuduhan merogol pembantu rumahnya warga Indonesia di Mahkamah Sesyen hari ini.?Yong, yang juga Ahli Dewan Undangan Negeri (ADUN) Tronoh, mengaku tidak bersalah terhadap pertuduhan itu yang dibacakan ke atasnya di hadapan Hakim Norashima Khalid.?Mengikut pertuduhan yang dibuat mengikut Seksyen 376 Kanun Keseksaan, Yong didakwa melakukan perbuatan itu di sebuah bilik di tingkat atas rumahnya di Meru Desa Park, pada 7 Julai, antara 8.15 malam hingga 9.15 malam.?–fotoBERNAMA (2019) HAK CIPTA TERPELIHARA?
NATIONAL

கற்பழிப்பு குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள பேராக் ஆட்சிக் குழு உறுப்பினர் தமது பணிகளைத் தொடரலாம்!

ஈப்போ, நவ.19-

இந்தோனேவழசிய பணிப் பெண்ணை கற்பழத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பேராக் ஆட்சிக் குழு உறுப்பினர் போல் யோங் சூ கியோங் தனது வழக்கு செஷன்ஸ் நீதிமன்றத்தில் இருந்து உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று செய்த மனு மீதான தீர்ப்பு கிடைக்கும் வரையில் அவரது பணிகளைத் தொடரலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

நீதிமன்றத்தில் தமது குற்றம் நிரூபிக்கப்படும் வரை தாம் நிரபராதி என்பதால் ஓர் ஆட்சிக் குழு உறுப்பினராக தமது பணிகளை செய்ய தாம் விரும்புவதாக யோங் கடிதம் வரைந்திருப்பதாக மந்திரி பெசார் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.  தமது மனு மீது உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறும் வரையில், தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் சட்டமன்றத் தொடரில் அவர் பொறுப்பேற்றுள்ள வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை, பொது போக்குவரத்து , இஸ்லாமிய அல்லாதோர் விவகாரம் மற்றும் புதுக் கிராமம் தொடர்பான கேள்விகளுக்கு தாம் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளதாக யோங் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக அவ்வறிக்கை கூறியது.

மேருவில் உள்ள தமது இல்லத்தில் 23 வயது இந்தோனேசிய பணிப் பெண்ணை கற்பழித்ததாக கடந்த ஆகஸ்டு 23ஆம் தேதி செஷன்ஸ் நீதிமன்றத்தில் சாட்டப்பட்ட குற்றச்சாட்டை மறுத்து யோங் விசாரணை கோரினார்.


Pengarang :