NATIONAL

கூட்டரசு அரசாங்கத்தின் அந்நிய நாடுகள் கடன் ரிம.29.2 பில்லியன்

கோலாலம்பூர், நவ.20-

நாட்டின் அந்நிய நாட்டு கடன் தொகை இவ்வாண்டு ஜூன் இறுதி வரை 29.2 பில்லியன் ரிங்கிட் என மக்களவையில் இன்று தெரிவிக்கப்பட்டது.
இத்தொகையில் அமெரிக்க டாலர் மதிப்பிலான கடன் 15.9 பில்லியன் டாலர், டினா இஸ்லாமிக் நாணயத்திலான கடன் 216 மில்லியன் ரிங்கிட், ஈரோ நாணய மதிப்பிலான கடன் 1.6 மில்லியன் ரிங்கிட் மற்றும் கன டா டாலர் மதிப்பிலான கடன் 2.6 மில்லியன் ரிங்கிட் ஆகியவை உள்ளடங்கும் என்று இது நாட்டின் மொத்த கடனில் 1.9 விழுக்காடு என்றும் நிதியமைச்சு கூறியது.

1963ஆம் ஆண்டு அந்நிய நாட்டு கடன் சட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள 35 பில்லியன் ரிங்கிட் வரம்பில் நாட்டின் தற்போதைய கடன் தொகை இருப்பதாக அமைச்சு விளக்கமளித்தது.
அந்நிய நாடுகள் அல்லது அவற்றின் பிரதிநிதிகளிடம் இருந்த நாடு பெற்றுள்ள போண்ட் மற்றும் கடன் தொகை குறித்து லிப்பிஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அப்துல் ரஹ்மான் கேட்ட கேள்விக்கு நிதியமைச்சு மேற்கண்டவாறு பதிலளித்தது.


Pengarang :