SELANGOR

கைவிடப்பட்ட தாய்மார்களும் மாநில அரசு உதவிக்கு விண்ணப்பிக்கலாம்

ஷா ஆலம், நவ.12-

கணவரால் கைவிடப்பட்டு தனித்து வாழும் தாய்மார்கள், தங்கள் வாழ்க்கை தொடர்ந்து சீராக நடைபெறுவதற்கு மாநில அரசின் உதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த உதவிக்குத் தகுதி பெறுவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் காவல் துறையின் உறுதிக் கடிதத்தையும் கிராமத் தலைவரின் ஆதரவு கடிதத்தையும் கொண்டிருக்க வேண்டும் என்று சுகாதாரம், சமூகநலன், மகளிர் மற்றும் குடும்ப மேம்பாட்டு துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் சித்டி மரியா மாஹ்முட் கூறினார்.

இந்தத் தரப்பினருக்கு உதவி வழங்குவது சற்று கடினமான நடவடிக்கையாகும், ஏனெனில் இவர்களுக்கு சட்டப்பூர்வமான கணவர் இருக்கிறார், ஆனால் சிறிது காலம் இருப்பார், சில காலம் காணாமல் போய்விடுவார் என்றார் அவர்
மனைவியையும் பிள்ளைகளையும் நிராதராவாய் விட்டு கணவன் பிரிந்து சென்றுவிடுகிறார். ஆனால், முறையாக விவாகரத்து பத்திரம் அல்லது மரணச் சான்றிதழ் கொண்டிருக்கும் தனித்து வாழும் தாய்மார்களுக்கு உதவி புரிவது எளிதாகும் என்றார்


Pengarang :