NATIONALRENCANA PILIHAN

கோத்தாபாரு – டுங்குன் இசிஎல்ஆர் திட்டம் ,குறிந்து பொது மக்கள் கருத்து தெரிவிக்கலாம்

கோலாலம்பூர், நவ.22-

கோத்தா பாரு தொடங்கி டுங்குன் வரையிலான கிழக்கு கரை ரயில் திட்டத்தின் இசிஎல்ஆர்) புதிய பயணப் பகுதிகள் குறித்து வரும் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி நடைபெறவிருக்கும் பொது மக்கள் பார்வையிடல் நடவடிக்கையின்போத் அறிவிக்கப்படும் என்று மலேசிய ரயில் லிங்க் பெர்ஹாட் (எம்ஆர்எல்) தெரிவித்தது.

210.4 கிலோமீட்டர் தூரத்திலான கோத்தாபாரு – டுங்குன் பயண வழி (செக்ஸன் ஏ என்றழைக்கப்படும்) குறித்து பொது மக்கள் தங்கள் பரிந்துரைகளையும் கருத்துக்களையும் மூன்று மாத காலம் நடைபெறவிருக்கும் பொது பார்வையிடல் நடவடிக்கையின்போது பொது மக்கள் தெரிவிக்கலாம் என்று எம்ஆர்எல் கூறியது.

இந்த செக்ஸன் ஏ திட்டத்தில் கிளந்தானில் கோத்தா பாரு மற்றும் பாசீர் பூத்தே ஆகிய பகுதிகளில் இரு நிலையங்களும் திரெங்கானு மாநிலத்தில் ஜெர்தே, பண்டார் பெர்மைசூரி, கோல திரெங்கானு மற்று டுங்குன் ஆகிய பகுதிகளில் 4 நிலையங்கள் நிறுவப்படும் என்று அவ்வறிக்கை தெரிவித்தது. பரிந்துரையில் இருக்கும் 1.4 கிலோ மீட்டர் தூர பாதையானது கிளந்தானையும் தோக் பாலி துறைமுகத்தையும் இணைக்கும் என்றும் அது கூறியது.


Pengarang :