NATIONAL

சிரம்பான் ஜெயா சட்ட மன்ற உறுப்பினர் மீதான இரண்டு குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் நீக்கியது

சிரம்பான், நவம்பர் 6:

சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றம், சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி.குணசேகரனுக்கு எதிராக அவர் தமிழீழ விடுதலைப் புலி (எல்டிடிஇ) தொடர்புள்ள பொருள்களை வைத்திருந்ததாகக் கூறும் இரண்டு குற்றச்சாட்டுகளைக் கைவிடுவதாக அரசுத் தரப்பு செய்துகொண்ட மனுவை ஏற்றுக்கொண்டது.

டிபிபி அஸ்லிண்டா அஹாட் தாக்கல் செய்த மனுவை நீதிபதி மதிஹா ஹருல்லா ஏற்றுக்கொண்டதாக பெர்னானா செய்தி கூறுகிறது.

அக்குற்றச்சாட்டுகளில் டிஏபி சட்டமன்ற உறுப்பினர் சிரம்பானில் உள்ள அவரது வீட்டிலும் அலுவலகத்திலும் எல்டிடிஇ- தொடர்புப் பொருள்கள் வைத்திருந்ததாகக் கூறப்பட்டிருந்தது.

அக்டோபர் 29-இல் நெகிரி செம்பிலான் டிஏபி துணைத் தலைவருமான குணசேகரன்மீது அவர் எல்டிடிஇ இயக்கத்துக்கு ஆதரவளிப்பதாகக் குற்றஞ் சாட்டப்பட்டது. பின்னர் அக்டோபர் 31-இல் அவர் கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு எல்டிடிஇ -தொடர்புப் பொருள்கள் வைத்திருந்ததாக மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.


Pengarang :