SELANGOR

சுபாங்கில் விண்வெளி தொழில்துறையில் வெ.91.5 மில்லியன் முதலீடு !!!

ஷா ஆலம், நவம்பர் 6:

சுபாங் பகுதியில் வின்வெளி தொழில்துறையில் 91.5 மில்லியன் வெள்ளி மதிப்பிலான முதலீடு பெறப்பட்டுள்ளதாக முதலீடு, தொழிற்துறை மற்றும் வர்த்தகம், சிறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.

இந்த முதலீட்டு தொகையானது ஏர்ரொட் தெக்னோ பவர் சென்.பெர்ஹாட், யுபெகா ஏரோதெக் சென். பெர்ஹாட் மற்றும் ஏஃப்ஜெட்ஸ் சென். பெர்ஹாட் ஆகிய 3 நிறுவனங்கள் செய்துள்ள முதலீடுகளின் மொத்தத் தொகை என்று அவர் விவரித்தார்.
இன்வெஸ்ட் சிலாங்கூர் எனும் திட்டத்தின் வாயிலாக முதலீடு குறித்து பரிந்துரைகள் பெறப்பட்டதும் சம்பந்தப்பட்ட தரப்புகளோடு தொடர்ந்து இணக்கமான உறவை கொண்டிருந்ததால், இம்முதலீடுகளை வெற்றிகரமாகத் தக்க வைக்க முடிந்தது என்றும் அவர் சொன்னார்.

நிறுவனம் குறித்த தகவல்களை திரட்டுவது, சந்திப்புக் கூட்டங்களை ஏற்பாடு செய்வது, திட்டத்தின் மேம்பாடு குறித்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்வது போன்றவற்றை இன்வெஸ்ட் சிலாங்கூர் ஒருங்கிணைக்கும் என்றார் அவர்.


Pengarang :