NATIONALRENCANA PILIHAN

தாபோங் ஹாஜியை மீட்க ரிம.10.3 பில்லியனுக்கு அரசாங்கம் பொறுப்பெற்றது!

கோலாலம்பூர், நவ.15:

தாபோங் ஹாஜி வாரியத்தின் நிதி நிலையை உறுதிசெய்வதற்காக 10.3 பில்லியன் ரிங்கிட் பிரிமியத் தொகைக்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்நடவடிக்கையானது ஹஜ் யாத்திரை வாரியத்தின் நிதியை மறு சீரமைக்கவும் மீட்கவும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் ஒன்றாகும் என யூஜேஎஸ்பி அறிவித்தது.

நிதி நிர்வாக முறைகேட்டினால் சரிவடைந்த தாபோங் ஹாஜி வாரியம் கடந்த டிசம்பர் மாதம் வரை செலுத்தாத 9.63 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்து விவகாரத்தை தீர்த்து வைக்க நிதி அமைச்சினால் தோற்றுவிக்கப்பட்ட நிறுவனமே இந்த யூஜேஎஸ்பி ஆகும்.

19.90 பில்லியன் ரிங்கிட் சொத்தின் சந்தை மதிப்பு 9.63 பில்லியன் ரிங்கிட்டாக சரிந்ததைத் தொடர்ந்து திஎச் நிதி நிலையை மறுசீரமைப்பதற்காக அரசாங்கம் அத்தொகைகளுக்கு இடையிலான 10.3 பில்லியன் ரிங்கிட்டிற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது என்று யூஜேஎஸ்பி ஓர் அறிக்கையில் தெரிவித்தது.


Pengarang :