Malaysia’s Defence Minister Mohamad Sabu speaks during the IISS Shangri-La Dialogue summit in Singapore on June 1, 2019. (Photo by ROSLAN RAHMAN / AFP)
ANTARABANGSANATIONAL

தாய்லாந்து குற்றவாளிகளுக்கு மலேசியா அடைக்கலம் கொடுக்கவில்லை!

பேங்காக், நவ.22-

தாய்லாந்து அரசாங்கத்தால் தேடப்படும் அதன் தென் வட்டார குற்றவாளிகளுக்கு மலேசியா பாதுகாப்பளிப்பதாகக் கூறப்படுவது ஓர் அடிப்படையற்ற குற்றச்சாட்டு என்று தற்காப்பு அமைச்சர் முகமது சாபு கூறினார். இவ்விரு நாடுகளுக்கு இடையிலான எல்லை வழியாக நாட்டிற்குள் நுழையும் அனைத்து அந்நியர்களையும் பாதுகாப்பு பிரிவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்றார் அவர்.

இவ்விரு நாடுகளின் பாதுகாப்பு பிரிவினர் குறிப்பாக தரைப் பகுதி எல்லையில் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மலேசியா-தாய்லாந்து பொது எல்லை செயற்குழு தடம் மூலம் அடிக்கடி தொடர்பு கொண்டும் தகவலைகளையும் பரிமாறி வருகின்றனர் என்றும் அவர் விளக்கமளித்தார்.
இதன் வழி தாய்லாந்தைச் சேர்ந்த குற்றவியலாளர்களுக்கு மலேசியா பாதுகாப்பு வழங்குகிறது என்ற குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்பது தெளிவாகின்றது என்று முகமது சாபு தெரிவித்தார்.


Pengarang :