NATIONAL

தேர்தல் வாக்குறுதிகளை பக்காத்தான் நிறைவேற்றத் தவறியதே தஞ்சோங் பியாய் தோல்விக்கான காரணம்

கோலாலம்பூர், நவ.19-

தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத்தேர்தல் முடிவானது நம்பிக்கை கூட்டணி அதன் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதையே நினைவுருத்துகிறது என்று ஜசெக பொது செயலாளர் லிம் குவான் எங் கூறினார்.
“”நாம் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை மக்கள் காண விரும்புகின்றனர். எனவே, கடந்த பொதுத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவது மீது பக்காத்தான் கவனம் செலுத்துவது அவசியமாகும்” என்றார் அவர்.

“ நாம் உண்மையாக முயற்சிகளை மேற்கொண்டால், நிச்சயம் மக்கள் நம்மை மதிப்பிடுவதோடு பக்காத்தான் அரசாங்கத்திற்கு சாதகமாகவும் அவர்கள் இருப்பர் என்று நான் நம்புகிறேன்” என்று எஸ்எம்இ வங்கி, மலேசிய ரயில் லிங்க் நிறுவனம் மற்றும் சீனா தொடர்பு கட்டுமான நிறுவனம் ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சிக்கு பின்னர் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் நிதி அமைச்சருமான குவான் எங் தெரிவித்தார்.
எனினும், யூஇசி அங்கீகாரம் மற்றும் தார் பல்கலைக்கழக நிதி ஒதுக்கீடு ஆகிய விவகாரங்களே தோல்விக்கான முக்கிய காரணங்கள் என்பதை அவர் ஏற்றுக் கொள்ள மறுத்தார்.


Pengarang :