NATIONAL

நாடாளுமன்ற கூட்டம் தொடங்குவதற்குத் தேவையான குறைந்தபட்ச எண்ணிக்கை இல்லை!!!

நாடாளுமன்றம், நவம்பர் 29:

இன்று காலை நாடாளுமன்றக் கூட்டம் வழக்கம்போல் தொடங்கி முதல் அங்கமாக கேள்வி நேரத்தில் ஹசான் பஹாரோம்(தம்பின் -ஹரப்பான்) அவரது கேள்வியைக் கேட்கலாம் என்று கூறப்பட்டு அவரும் கேள்வி கேட்க எழுந்தார்.

அப்போது அப்துல் ரஹ்மாட் முகம்மட்(லிப்பிஸ்- பிஎன்) இடைமறித்து “கூட்டம் தொடங்குவதற்குத் தேவையான குறைந்தபட்ச எண்ணிக்கை இல்லை” என்பதைச் சுட்டிக்காட்டினார்.

அதைத் தொடர்ந்து மக்களவைத் முகம்மட் அரிப் முகம்மட் யூசுப் அங்கிருந்த எம்பிகளை எண்ணிப்பார்த்தார்.

“24பேர்தான் உள்ளனர். (எம்பிகளை அழைக்கும்) மணி ஓசை ஒலிக்கட்டும்”, என்றார். நாடாளுமன்றக் கூட்டம் தொடங்க குறைந்தது 26 எம்பிகள் தேவை.

அதன் பின்னர் 26வது எம்பி வந்தார்- புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தஞ்சோங் பியாய் எம்பி வீ செக் செங்.

மணி ஓசை விடாது மூன்று நிமிடம் ஒலித்தது. அது ஒலித்து முடித்தபோது அவையில் 28 எம்பிகள் இருந்தனர்.

இதன் தொடர்பில் பின்னர் முகநூலில் பதிவிட்டிருந்த கிளானா ஜெயா எம்பி, வொங் சென், இன்று காலை மக்களவையில் ஓர் அமைச்சரும் ஒரு துணை அமைச்சரும்தான் இருந்தனர் என்று பதிவிட்டிருந்தார்.

இதனால் கூட்டம் இரண்டு நிமிடத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பின்னர் ஓய்விடத்தில் காபி அருந்திக் கொண்டிருந்த எம்பிகள் ஓடோடி வந்தனர். பிறகு வழக்கப்படி கூட்டத் தொடர் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.


Pengarang :