People participate in a yoga class called “Yoga without Borders”, near the border wall next to the Rio Grande River on the border between El Paso, US and Ciudad Juarez, Mexico, on November 10, 2019. (Photo by HERIKA MARTINEZ / AFP)
ANTARABANGSARENCANA

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் புதிய இன்சூலினாக யோகா?

ஷா ஆலம், நவ.12-

நீரிழிவு நோயாளிகளுக்கு உதவ சில வகை உடற்பயிற்சிகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பர். எனினும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் யோகா ஆலோசகரான டாக்டர் எஹ்.ஆர். நாகேந்திரா, இந்த நோயைத் தவிர்ப்பதபற்கும் நிர்வகிப்பதற்கும் ஒரு பழங்கால இந்திய நடவடிக்கையை பரிந்துரை செய்கிறார்.
இந்தியா, சீனா மற்றும் மலேசியாவைச் சேர்ந்தவர்களுக்கு நீரிழிவு இரண்டாம் வகை அதிகளவு பாதிப்பதாக கூறுகிறார் கர்நாடகா, பெங்களூரைச் சேர்ந்த இந்த 77 வயதான யோகா நிபுணர்.

இந்தியாவின் பிரசித்தி பெற்ற நிபுணர்களைக் கொண்ட முக்கிய யோகா அமைப்பு, நீரிழிவு இரண்டாம் வகை நோயை மேலும் மோசமடைவதில் இருந்து கட்டுப்படுத்துகிறது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டதாக கூறினார்.
ஒரு மணி நேர நடைப் பயிற்சியைக் காட்டிலும் ஒரு மணி நேர யோகா பயிற்சி இந்நோயைக் கட்டுபடுத்தவதோடு குறைந்த அளவிலான மருந்தை உட்கொள்ள வகை செய்வதாக அந்த ஆய்வில் கண்டறியப்பட்டதாக அவர் சொன்னார்.

பல்வேறு யோகா முறைகள் இருந்தாலும், அவற்றில் மிகவும் பிரசித்தி பெற்றது ஹட யோகாவாகும். இது உடலுக்கு மட்டும் பயிற்சி அளிக்காமல் சுவாசப் பயிற்சி மற்றும் தியானத்தையும் போதிக்கிறது. இதன் வழி உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.


Pengarang :