NATIONAL

பணவீக்க அழுத்த நிலை 2020இல் தொடர்ந்து கட்டுப்பாட்டில் இருக்கும்

கோலாலம்பூர், நவ.21-

வரும் 2020இல் கடுமையான பணவீக்கம் ஏற்படும் சாத்தியம் நிலவியபோதிலும் மிதமான தேவையின் வழி பணவீக்க அழுத்த நிலை தொடர்ந்து கட்டுப்பாட்டில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. அடுத்த ஆண்டில் உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி எதிர்பார்த்ததைக் காட்டிலும் 4.8 முதல் 5.0 விழுக்காடு வரை மிகவும் தாமதமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஆக்கப்பூர்வ அனுகூல விகிதாச்சாரத்துடன் நிச்சயமற்ற வர்த்தகம் மற்றும் பலவீனமான முதலீட்டைப் பாதுகாக்க பேங்க் நெகாரா ஓரிரவு கொள்கை(ஓபிஆர்) விகிதாச்சாரத்தைக் குறைக்கும் என்று யுனைடட் ஓவர்சீஸ் பேங்க் மலேசியா குறிப்பிட்டது.

“இதன் பொருட்டு 2020 முதல் காலாண்டில் 25 ஓபிஆர் அடிப்படை புள்ளிகள் 2.75 விழுக்காடாகக் குறைக்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று யுனைடட் ஓவர்சீஸ் பேங்க் மலேசியா உயரதிகாரி ஜூலியா கோ கூறினார்.


Pengarang :