KUALA LUMPUR, 18 Nov — Timbalan Menteri Pendidikan Teo Nie Ching (kiri) ketika hadir pada Persidangan Dewan Rakyat di Parlimen hari ini. –fotoBERNAMA (2019) HAK CIPTA TERPELIHARA
NATIONALRENCANA PILIHAN

பள்ளி நிகழ்ச்சிகளில் அரசியல்வாதிகள் கலந்து கொள்ளத் தடையில்லை!

கோலாலம்பூர், நவ.18-

பள்ளி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சியினருக்கு தடை விதிக்கும் கொள்கை எதுவும் இல்லை என்று துணை கல்வியமைச்சர் தியோ நீ சிங் வலியுறுத்தினார்.

எனினும், பள்ளிகளை உட்படுத்தும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் குறித்து மாநில கல்வி இயக்குநர் மூல அமைச்சின் அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று அவர் தெளிவுபடுத்தினார்.

கல்வி அமைச்சர், துணை கல்வி அமைச்சர், மலேசிய கல்வியமைச்சின் தலைமை செயலாளர், கல்வி தலைமை இயக்குநர், மாநில கல்வி இயக்குநர் அல்லது அவர்களின் பிரதிநிதி ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் சொன்னார்.

பள்ளி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு எதிர்க்கட்சி மக்கள் பிரதிநிதிகளுக்கு எந்தளவிற்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது என்று பாயா பெசார் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது சாஹார் அப்துல்லா கேட்ட கேள்விக்கு தியோ மேற்கண்ட விளக்கத்தை அளித்தார்.


Pengarang :