Exco Kerajaan Negeri Selangor, Dr. Siti Mariah Mahmud menjawab soalan ketika Sesi Pertanyaan Lisan di Dewan Undangan Negeri Selangor pada 11 November 2019. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI
SELANGOR

பிடபள்யூபிக்கான ஒதுக்கீடு ஐடபளியூபிக்காக பயன்படுத்தப்படவில்லை

ஷா ஆலம், நவ.11-

மகளிர் மேம்பாட்டு மையத்திற்கு (பிடபள்யூபி) ஒதுக்கப்பட்ட நிதியானது மகளிர் மேம்பாட்டு கழகத்திற்கு முக்கியத்துவம் அளித்தே வழங்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டை டாக்டர் சித்தி மரியா மஹ்முட் மறுத்தார்.
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் அதன் திட்டங்களை மேற்கொள்வதற்கி ஐஆர்பிக்குத் தனியாக ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என்று சுகாதாரம், சமூகநலன், மகளிர் மற்றும் குடும்ப மேம்பாட்டு துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினருமான டாக்டர் சித்தி மரியா கூறினார்.

`மாநில நிலையிலான பிடபள்யூபி செயலாற்றல் மேம்பாட்டு வடிவிலான பல்வேறு திட்டங்களை சட்டமன்ற தொகுதி நிலையில் மேற்கொள்வதால் குறைந்த பலனை மட்டும் காண முடிகிறது” என்றார் அவர்.

எனவே, இந்தத் திட்டத்தில் சில சட்டமன்ற தொகுதிகளை இணைத்துக் கொளவதன் மூலம் அந்தத் சட்டமன்ற தொகுதிகள் நிதியுதவி அளிப்பதால் சற்று பெரிய இந்நிகழ்ச்சிகளை மேற்கொள்ள முடிகிறது என்று அவர் விவரித்தார்.


Pengarang :