Amirudin Shari menyampaikan sumbangan kepada kanak-kanak ketika Majlis Rumah Terbuka Deepavali DUN Sungai Tua 2019 di Dewan Seri Siantan, Batu Caves pada 24 November lalu. Foto ASRI SAPFIE/SELANGORKINI
NATIONALRENCANA PILIHANSELANGOR

மக்கள் நலனுக்காக சமய புரிந்துணர்வு பேதங்களை புறம் தள்ளுவீர்!

பத்து கேவஸ், நவ.25-

மாநில மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதில் நிறம்,சமயம் மற்றும் கலாச்சார புரிந்துணர்வு அனைத்தையும் சிலாங்கூர் அரசாங்கம் புறம் தள்ளிவிட்டது.
அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட 2020 வரவு செலவு திட்டத்தில் அனைத்து இனங்களுக்கும் நன்மையளிக்கும் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதை மந்திரி பெசார் அமிருடின் ஷாரி சுட்டிக் காட்டினார்.

“அவற்றில் ஒன்று மாநிலம் முழுவதிலும் உள்ள தேசிய மாதிரி தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக 5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டது” என்றார் அவர்.
அதேவேளையில், சமூக பொருளாதாரத்தை மேம்படுத்தவும் வலுவூட்டவும் ஹிஜ்ரா திட்டத்தின் மூலம் இந்திய தொழில்முனைவர்களை மேம்படுத்தும் நடவடிக்கையை மாநில அரசு மேற்கொண்டு வருவதாக அவர் சொன்னார்.


Pengarang :