20181009_PEO_MINISTER HOUSING AND LOCAL GOVERNMENT ZURAIDA KAMARUDDIN _PHOTO BY SAM FONG
NATIONAL

மலேசிய மை செகண்ட் ஹோம்’ திட்டத்தின் கீழ் அந்நிய நாட்டவர்களுக்கு சொகுசு வீடுகளை விற்கலாம்

ஷா ஆலம், நவ.20-

இன்னும் விற்கப்படாத சொகுசு வீடுகளை அந்நிய நாட்டு நிபுணத்துவ பணியாளர்களிடம் (எக்ஸ்பெட்) ‘மலேசிய மை செகண்ட் ஹோம்’ திட்டத்தின் கீழ் விற்கலாம் என்று வீடமைப்பு மர்றும் ஊராட்சி துறை அமைச்சு தெரிவித்தது.
இந்நடவடிக்கையானது தேங்கிக் கிடக்கும் சொகுசு வீடுகளின் எண்ணிக்கை குறைவதோடு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் என்று அதன் அமைச்சர்

ஜுரைடா கமாருடின் கூறினார்.
2019ஆம் ஆண்டு இரண்டாவது காலாண்டு தேசிய சொத்துடமை தகவல் மையத்தின் புள்ளிவிவரப்படி 1 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான விலைமதிப்பிலான 4,213 அல்லது 12.8 % வீடுகள் இன்னும் விற்கப்படாமல் இருக்கின்றன. இவற்றின் மதிப்பு 8.3 பில்லியன் ரிங்கிட்டாகும் என்றார் அவர்.
லெங்கோங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் ஷம்சுல் அனுவார் நஸரா கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அமைச்சர் மேற்கண்ட விவரங்களை வெளியிட்டார்.


Pengarang :