Ng Sze Han
SELANGOR

மின்சார எரிசக்தியாக உருமாறும் திட கழிவு பொருள்

ஷா ஆலாம், நவ.8-

மாநில அரசாங்கத்தின் துணை நிறுவனமான வோர்ல்டுவாய்ட் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (WHB) சிலாங்கூர் மாநிலத்தில் திட கழிவுப் பொருட்களை மின்சார எரிசக்தியாக உருமாற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தவிருக்கிறது.

வோர்ல்டுவாய்ட் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் நிறுவனத்திற்கு ஒருங்கிணந்த திட கழிவு பொருளை நிர்வகிப்பதற்கான பொறுப்பு தற்போது வழங்கப்பட்டிருப்பதாக ஊராட்சிமன்ற, பொது பொக்குவரத்து மற்றும் புது கிராம மேம்பாட்டிற்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் எங் சீ ஹான் தெரிவித்தார்.
இந்த திட கழிவு பொருள் நீண்ட காலத்திற்குப் பயன்படுத்தப்படும் என்று அவர் மேலும் சொன்னார்.

“புதிய தொழில்நுட்பத்தின் வழி சிலாங்கூரில் திட கழிவு பொருள் வெறுமனே அழிக்கப்படாது மின்சார எரிசக்தியாக மாற்றப்படும். அதோடு, உர உற்பத்தி,மறு சுழற்சி பொருள் போன்றவையும் மாநில அரசாங்கத்தின் பொருளாதார நடவடிக்கைகளின் மதிப்பை அதிகரிக்கும்” என்றார் அவர்.


Pengarang :