Amirudin Shari pada sidang Dewan Negeri Selangor. Foto ASRI SAPFIE/SELANGORKINI
NATIONALRENCANA PILIHANSELANGOR

மேற்கு கரை நெடுஞ்சாலைத் திட்டம் மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும்

ஷா ஆலம், நவ.12-

பேராக், தைப்பிங் தொடங்கி சிலாங்கூர், பந்திங் வரையிலான மேற்கு கரை நெடுஞ்சாலை நிர்மாணிப்பதானது மாநிலத்தின் வட பகுதியின் பொருளாதார மேம்பாட்டிற்கு வித்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நெடுஞ்சாலை திட்டமானது சபாக் பெர்ணம், சுங்கை பெசார், தஞ்சோங் காராங், கோல சிலாங்கூர் மற்றும் உலு சிலாங்கூர் வட்டாரங்களுக்கு பெருமளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

அதேவேளையில், சம்பந்தப்பட்ட ஆட்சிக் குழு உறுப்பினர்களான இஸாம் இஸ்மாயில், வி. கணபதிராவ் மற்றும் ரோட்சியா இஸ்மாயில் ஆகியோரை சம்பந்தப்பட்ட பகுதிகளில் மேம்பாட்டு சாத்தியங்களைக் கண்டறியும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

சபாக் பெணம் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து சபாக் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அகமது மஸ்லான் ஒஸ்மான் தொடுத்த கூடுதல் கேள்விக்குப் பதிலளிக்கையில், அமிருடின் மேற்கண்டவாறு பேசினார்.


Pengarang :