Dato’ Menteri Besar Selangor, Amirudin Shari berucap pada sidang Dewan Negeri Selangor di Dewan Annex, SUK Shah Alam. 8 November 2019. Foto REMY ARIFIN/SELANGORKINI
RENCANA PILIHANSELANGOR

வெளிநாட்டு மாணவர்களுக்கு ரிம. 29.7 மில்லியன்

ஷா ஆலம், நவ.8-

மாநில அரசு அதன் நிறுவனத்தின் மூலம் மேற்காட்சிய பல்கலைக்கழகம் மற்றும் மத்திய கிழக்கு பல்கலைக்கழகங்களில் உயர்க்கல்வி மாணவர்களுக்கு இத்திட்டம் அறிமுகப்பட்டது முதல் இதுவரை ரிம. 29.7 மில்லியன் வழங்கியுள்ளது.
இந்த அனுகூலத்தை பெற்ற மொத்த 293 மாணவர்களில் 173 மாணவர்கள் எகிப்து நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று மந்திரி பெசார் அமிருடின் தெரிவித்தார்.

வெளிநாட்டு பட்டப்படிப்பு மாணவர் உதவிநிதியானது மத்திய கிழக்கு, மத்திய கிழக்கு அல்லாத, பொதுவான வெளிநாட்டு பட்டப்படிப்பு மாணவர்களின் கல்வி மேம்பாட்டு உதவி போன்றவை இந்த உதவிநிதி திட்டத்தில் அடங்கும் என்றார் அவர்.

மத்திய கிழக்கு நாடுகளுக்கான பட்டப்படிப்பு உதவிதி எகிப்து, ஜோர்டான் மற்றும் மொரோக்கோ ஆகிய மூன்று நாடுகளைச் சேர்ந்த 50 மாணவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்க 4 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சொன்னார்.


Pengarang :