Ir Izham Hashim membincangkan sesuatu bersama pihak berwajib yang hadir ketika beliau melawat Kolam Takungan Banjir Bandar Puteri, Klang Pelancaran Program Penyelenggaraan Kolam Takungan Banjir Negeri Selangor di kawasan kolam itu, hari ini. Foto ASRI SAPFIE/SELANGORKINI
RENCANA PILIHANSELANGOR

வெள்ள அபாயத்தைக் குறைக்க புதிய தொழில்நுட்பத்தை ஆராய்கிறது சிலாங்கூர்

கிள்ளான், நவ.19-

சிலாங்கூர் மாநிலத்தில் வெள்ள அபாயத்தைக் குறைக்கும் முயற்சியாக திடல் அல்லது பொது வாகன நிறுத்துமிடத்தின் கீழ் நீர் தேக்கக் குளங்களை அமைக்கும் புதிய தொழில்நுட்பத்தை இம்மாநிலம் ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
நீர் தேக்க குழாய் முழுமையான பலனை அளிக்கும் வகையில் இப்பணிக்கு மாநில அரசு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் என்று கட்டமைப்பு, அடிப்படை வசதிகள், நவீன விவசாயம் மற்றும் அடிப்படை தொழிற்துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்ஞீனியர் இஷாம் ஹாஷிம் கூறினார்.

“எந்தவொரு மேம்பாட்டு திட்டமும் முக்கிய அம்சங்களான கால்வாய் மற்றும் வெள்ள தேக்க குளம் ஆகியவற்றில் இருந்து விடுபட முடியாது” என்றார் இஷாம்.
அதே வேளையில், துரித மேம்பாட்டு பணிகள் வெள்ளம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துவது நிச்சயம். இதனால் பொதுச் சொத்துகளுக்கு பேரழிவு ஏற்படும் என்றும் அவர் கூறினார்.


Pengarang :