SELANGOR

2019 செப்டம்பர் வரை ரூமா சிலாங்கூர் கூ திட்டத்திற்கு 192,564 பேர் விண்ணப்பித்துள்ளனர்

ஷா ஆலம், நவ.8-

ரூமா சிலாங்கூர் கூ வீடுகளுக்காக இவ்வாண்டு செப்டம்பர் மாதம் வரை 192,564 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இதனிடையே, இந்த வீட்டமைப்புத் திட்டத்திற்கு விண்ணப்பம் செய்துள்ள போதிலும் இன்னும் அங்கீகரிக்கப்படாமல் அல்லது காத்திருக்கக் கோரும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 56,782 பேர்கள் ஆகும் என்று வீடமைப்பு மற்றும் நகர்ப்புற வாழ்க்கை துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் ஹானிஸா தால்ஹா கூறினார்.

2019 செம்படம்பர் வரையில் ரூமா சிலாங்கூர் கூ வீடமைப்புத் திட்டத்தில் குடியேறிவிட்ட விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 14,781 ஆகும் என்றும் அவர் விவரித்தார்.
ரூமா சிலாங்கூர் கூ கொள்கை 2014ஆம் ஆண்டில் தொடங்கியது. ஒட்டு மாநில ஆட்சி மன்றத்தின் மூலம் மாநில அரசு 121,695 வீடுகளை உள்ளடக்கிய 277 திட்டங்களை அங்கீகரித்துள்ளது என்றார் அவர்.

கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி வரையில், 14,781 வீடுகளைக் கொண்ட 38 திட்டங்கள் முழுமைப் பெற்றதோடு சம்பந்தப்பட்ட வீடுகளின் சாவிகளும் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்ற தகவலையும் அவர் வெளியிட்டார்.


Pengarang :