Selangorkini
NATIONAL RENCANA PILIHAN

அனிஃபா அமானின் வெற்றி செல்லாது! – கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பு

ஷா ஆலம், டிச.2-

கிமானிஸ் நாடாளுமன்ற தொகுதியில் டத்தோஸ்ரீ அனிஃபா அமான் பெற்ற வெற்றியை செல்லாது என அறிவித்த தேர்தல் நீதிமன்றத்தின் முடிவை கூட்டரசு நீதிமன்றம் நிலை நிறுத்தியது.
கடந்த பொதுத் தேர்தலின் போது இங்கு நடைபெற்ற மும்முனைப் போட்டியில் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான அனிஃபா 156 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

அவருக்கு 11,942 வாக்குகள் கிடைத்த வேளையில் வாரிசான் வேட்பாளர் கரீம் பூஜாங்கும் ஹராப்பான் ராக்யாட் வேட்பாளர் ஜாஃப்பார் இஸ்மாயிலும் முறையே 11,786 மற்றும் 1,300 வாக்குகள் பெற்றனர்.
அம்னோவின் முன்னாள் உச்சமன்ற உறுப்பினருமான அவர் 2004ஆம் ஆண்டு முதல் கிமானிஸ் தொகுதியின் எம்பியாக இருந்து வந்தார்.


Pengarang :