Selangorkini
BAKU, 26 Okt — Perdana Menteri Tun Dr Mahathir Mohamad bercakap pada sidang akhbar bersama media Malaysia sebelum berlepas ke Turkmenistan untuk lawatan rasmi dua hari. –fotoBERNAMA (2019) HAK CIPTA TERPELIHARA BAKU, Oct 26 — Prime Minister Tun Dr Mahathir Mohamad speaking at a press conference with Malaysian media before leaving for Turkmenistan for a two-day official visit. –fotoBERNAMA (2019) COPYRIGHTS RESERVED
NATIONAL RENCANA PILIHAN

ஏபெக் 2020 வெற்றி பெறுவதை மலேசியா உறுதி செய்யும்!

சைபர்ஜெயா, டிச.4-

2020 ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (ஏபெக்) வெற்றி பெறுவதை உறுதி செய்ய வெளிநாட்டு இறக்குமதி சரிவு மற்றும் வர்த்தக கொள்கை சர்ச்சை தொடர்வது உட்பட பல்வேறு சவால்களை மலேசியா எதிர்கொள்ளும்.

இந்த ஏபெக் மலேசியாவிற்கு முக்கியமானது. ஏனெனில் நாட்டின் வர்த்தகத் துறை 80 விழுக்காடு இவ்வட்டாரத்தைச் சார்ந்துள்ளதோடு தயாரிப்புத் துறையின் நேரடி முதலீட்டில் 70 விழுக்காடு இதைச் சார்ந்துள்ளது என்றும் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கூறினார்.

“ஏற்றுமதி நடவடிக்கை தொடர்பான துறைகளில் 40 விழுக்காடு வேலை வாய்ப்புகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன” என்று அவர் சுட்டிக் காட்டினார்.
எனவே, இவ்வட்டார வர்த்தகம் நட்புறவான முறையில் நடைபெறுவதை உறுதி செய்வது அவசியம். இதன் வழி சாதாரன மக்கள் உட்பட அனைத்து மக்களும் வளப்பத்துடன் வாழ்வதற்கு இவற்றுடனான வர்த்தகம் மற்றும் முதலீடு முக்கியமாகும் என்றார் அவர்.


Pengarang :