NATIONAL

உற்பத்தித் துறை வருமானத்தின் மதிப்பு ரிம. 74.6 பில்லியனாக உயர்ந்தது!

கோலாலம்பூர், டிச.12-

நாட்டின் நேரடி உற்பத்தி துறையின் விற்பனை மதிப்பு இவ்வாண்டு அக்டோபர் வரை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2.2 விழுக்காடு அதிகரித்து 74.6 பில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 73.1 பில்லியன் ரிங்கிட் விற்பனை பதிவு செய்யப்பட்டது என்று புள்ளி விவரத்துறை தெரிவித்தது.

ஆண்டுதோறும் அதிகரித்து வரும் போக்குவரத்து வசதி பொருட்கள் ( 5.6 %), இதரப் பொருட்கள் (6.8%), உலோகம் அல்லாத கணிமப் பொருட்கள், மூல உலோகம் மற்றும் வடிவமைக்கப்பட்ட உலோகப் பொருட்கள் (5.5%) மற்றும் மின்னியல், மின்சாரப் பொருட்கள் (2.1%) ஆகிய பொருட்களின் விற்பனை அதிகரிப்பே இந்த வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளதாக அவ்வறிக்கை கூறியது.

கடந்த 2018ஆம் ஆண்டு இந்த உற்பத்தி துறைடின் தொழிலாளர்கள் எண்ணிக்கையான 1,076,377 இவ்வாண்டு 1.0 விழுக்காடு உயர்ந்து 1,086,908 ஆக அதிகரித்துள்ளது என்றும் அது குறிப்பிட்டது.
இந்தத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியமானது கடந்த ஆண்டு வழங்கப்பட்ட 96.3 மில்லியன் ரிங்கிட்டுடன் ஒப்பிடுகையில் 2.5 விழுக்காடு உயர்ந்து 3.99 பில்லியனாக உயர்ந்துள்ளது.


Pengarang :