Michelle Ng Mei Sze melakukan gimik perasmian pada Program Penanaman Pokok MPSJ di Jalan USJ 2/3, Subang Jaya pada 12 Disember 2019. Foto REMY ARIFIN/SELANGORKINI
PBTSELANGOR

எம்பிஎஸ்ஜே நிர்வாகத்தின் கீழ் 140,412 மரங்கள் நடப்பட்டுள்ளது !!!

சுபாங் ஜெயா, டிசம்பர் 12:

சுபாங் ஜெயா நகராண்மை கழக (எம்பிஎஸ்ஜே) நிர்வாகத்தின் கீழ் 140,412 மரங்கள் இந்த ஆண்டு நடப்பட்டுள்ளது என்று சுபாங் ஜெயா சட்ட மன்ற உறுப்பினர் மிஷல் எங் மே கூறினார். இந்த நடவடிக்கை மூலம் புவி வெப்பத்தை குறைக்கவும் மற்றும் ஒலி மாசுபடுவது குறைக்கவும் வழி செய்கிறது என்றார்.

” சிலாங்கூர் ஷா ஆலம் விரைவுச்சாலையில் (கெசாஸ்) ஏற்படும் ஒலியினால் மக்கள் படும் அவலங்களை இந்த நடவடிக்கையின் வழி குறைக்க முடியும். கெசாஸ் விரைவுச்சாலை நெடுகிலும் மரங்களை நகராண்மை கழகத்தின் பணியாளர்கள் நடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நடப்படும் மரங்கள் ஒலியை ஈர்த்து விடும்,” என்று எம்பிஎஸ்ஜே மரம் நடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Pengarang :