NATIONAL

கிறுஸ்துமஸை முன்னிட்டு போக்குவரத்து சம்மன்களுக்கு 50% கழிவு

கோலாலம்பூர், டிச.13-

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு குறிப்பிட்ட சில போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதத் தொகை 50 விழுக்காடு கழிவு வழங்கப்படுவதாக அரச மலேசிய காவல் துறை அறிவித்துள்ளது.
அபராதக் கட்டணங்களை கோலாலம்பூர் போக்குவரத்து அமலாக்கம் மற்றும் விசாரணை சதுக்கத்தில் டிசம்பர் 24 மற்றும் டிசம்பர் 26ஆம் தேதிகளில் காலை மணி 8.30 முதல் மாலை 4 மணி வரை பொது மக்கள் செலுத்தலாம் என்று மலேசிய காவல் துறை அதன் முகநூல் பக்கத்தில் ஒரு சுவரொட்டி மூலம் அறிவித்துள்ளது.

எனினும், விபத்து தொடர்பான சம்மன், அபராதத்திற்கு அப்பாற்பட்ட சம்மன், விசாரணையில் உள்ள சம்மன், புத்தாண்டு பாதுகாப்பு நடவடிக்கையின் போது பெறப்பட்ட சம்மன் மற்றும் லாரி தொடர்பான சம்மன் ஆகியவற்றுக்கு இந்தச் சலுகை வழங்கப்படாது என்று அது கூறியது.
கோலாலம்பூர் போக்குவரத்து அமலாக்கம் மற்றும் விசாரணைப் பிரிவுத் தலைவர் ஏசிபி ஜுல்கிப்ளி யாஹ்யாவுடன் வாடிக்கையாளர் சந்திக்கும் நாளை முன்னிட்டும் இச்சலுகை வழங்கப்படுகிறது.


Pengarang :